தமிழ்நாட்டில் அரசு பணிகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக தகுதிவாய்ந்த நபர்கள் பயனடைந்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக இதை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்த வகையில் இப்போது தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் அனைத்து ஓய்வூதியம் பெறக்கூடிய அனைத்து ஓய்வூதியதாரர்களும் தங்களது வாழ்நாள் சான்றிதழ், மறுமணம் செய்யா சான்றிதழ் ஆகியவைகளை ஜீவன் பிரமாண இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது.
அந்த அடிப்படையில் தற்போது ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை ஒவ்வொரு வருடமும் நவம்பர் (அல்லது) டிசம்பர் மாதத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். அவ்வாறு பதிவேற்றம் செய்தால்தான் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதை ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறும் வங்கிக்கிளைகள், வருங்கால வைப்புநிதி அலுவலகங்கள், தமிழக இ-சேவை மையங்கள், பொதுசேவை மையங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இச்சான்றிதழை பெற ஓய்வூதிய எண், ஆதார் ஜெராக்ஸ், வங்கிகணக்கு எண், செல்போன் எண் ஆகியவைகளை சமர்ப்பிக்க வேண்டி இருக்கும்.
இதையடுத்து தற்போது ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை பெற வங்கிகளுக்கு சென்று நீண்டநேரம் காத்திருந்து வாங்க வேண்டி இருந்தது. இதன் காரணமாக ஓய்வூதியதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இதுகுறித்து ஒரு அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த அரசாணையில் ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழை இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் (அல்லது) இ-சேவை மையம் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஓய்வூதியதாரர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.