Categories
தேசிய செய்திகள்

வாழ்நாள் முழுவதும் பென்ஷன்…. இதோ சூப்பரான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

இந்தியாவில் பலவகையான பாலிசி திட்டங்கள் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் இருக்கின்றன. நீங்கள் வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதிக்க விரும்பினால் எல்ஐசியின் இந்த திட்டம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதில் 40 வயது முதல் ஓய்வூதியம் பெற முடியும். இது ஒரு வகையான ஒற்றை பிரிமியம் ஓய்வூதிய திட்டம். இதில் ஒரு முறை மட்டுமே ப்ரீமியம் செலுத்த வேண்டும்.இந்த பாலிசியின் பெயர் சரல் பென்சன் யோஜனா.

பாலிசிதாரரின் மரணத்திற்கு பிறகு நாம் இன்றைக்கு ஒற்றை பிரிமியத்தின் தொகை திருப்பி அளிக்கப்படும். நீங்கள் இந்த பாலிசி எடுத்த உடனே ஓய்வூதியத்தை பெற தொடங்கலாம். ஓய்வூதியம் பெறுவோர் உயிருடன் இருக்கும் வரை அவர் ஓய்வூதியத்தை பெறுவார். இறந்த பிறகு அடிப்படை பிரீமியம் தொகை அவரது நாமினிக்கு திருப்பி வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் பயன் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகள் ஆகும் அதுவே அதிகபட்ச வயது வரம்பு 80 ஆண்டுகள். இதில் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும். மாதந்தோறும் ஓய்வூதியம் பெற முடியும். உங்கள் வசதிக்கு ஏற்ப இந்த பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். மாதந்தோறும் பணம் வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் எடுக்கலாம்.

அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது.உங்களுக்கு 40 வயதாகி 10 லட்சம் ரூபாய் ப்ரீமியமாக டெபாசிட் செய்தால் நீங்கள் வருடத்திற்கு ₹50250 பெறுவீர்கள். வாழ்நாள் முழுவதும் இது உங்களுக்கு கிடைக்கும்.நீங்கள் டெபாசிட் செய்த தொகையை நடுவில் திரும்ப பெற விரும்பினால் ஐந்து சதவீதத்தை கழித்த பிறகு நீங்கள் டெபாசிட் தொகை திருப்பி வழங்கப்படும்.

Categories

Tech |