Categories
தேசிய செய்திகள்

வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நகரமாக மாறிய மும்பை – முன்னாள் முதல்வர் மனைவி ட்விட் ..!!

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்பட்ட சுஷாந்த் சிங் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தொழில் போட்டி காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு, அதன் மூலம் அவர் தற்கொலை செய்து கொண்டாரா ? என்று பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தற்கொலை பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

இதுதொடர்பாக சுஷாத் சிங் தந்தை அளித்த புகாரின் பேரில் நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தற்கொலைக்கு தூண்டுதல், திருட்டு, மோசடி உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடிகை ரியா சக்கரபோர்த்தி துஷாந்த் சிங் காதலில் என்று சொல்லப்படும் நிலையில் இதை அவர் மறுத்துள்ளார்.

இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில் இதனை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி  அம்ருதா பட்னாவிஸ் டுவிட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மரணத்தை மும்பை போலீஸ் கையாள்வதை பார்க்கும்போது மும்பை அதன் மனிதத் தன்மையை இழந்து விட்டது. ஒன்றும் அறியாத அப்பாவி சுயமரியாதை உடைய குடிமக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நகரமாகி விட்டது என நான் உணருகிறேன் என்று தெரிவித்திருந்தார் .

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆளும் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இதுவரை  அம்ருதா பட்னாவிஸ் பாதுகாத்து வந்த அதே போலீசாரை பற்றி அவர் விமர்சனம் செய்கிறார் என்று கூறியுள்ளனர். சிவசேனாவின் மேலவை எம்பியான  பிரியங்கா சதுர்வேதி, முன்னாள் முதல்வரின் மனைவியாக இருந்து கொண்டு இப்படி பேசுவதற்கு வெட்கப்படவேண்டிய விஷயம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |