திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனாவிற்கான நிவாரண நிதியை கேட்டு திருநங்கைகள் மனுவை கொடுத்தனர்.
திருநெல்வேலியிலிருக்கும் கலெக்டர் அலுவலகத்திற்கு திருநங்கைகள் பலரும் திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் கொரோனாவிற்கான ஊரடங்கால் தங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது பொது மக்களுக்கு அரிசி ரேஷன் கார்டுகளுக்கு கொரோனாவிற்கான நிவாரண நிதியாக 4,000 ரூபாயை கொடுப்பதுபோல் தங்களுக்கும் நிதி கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் நிதி தொடர்பாக மனுவையும் கொடுத்தனர்.