ஐபிஎல் தொடரில் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் நோக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்ற பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டி இன்று 7.30 மணிக்கு ஷார்ஜாவில் தொடங்க உள்ளது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. அந்தப் போட்டியில் வெற்றி கண்டால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நோக்கத்தில் களம் இறங்குகின்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா, டிரென்ட் போல்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா அணிக்கு திரும்பியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி:-
1. ரோகித் சர்மா, 2. குயின்டான் டி காக், 3. இஷான் கிஷன், 4. சூர்யகுமார் யாதவ், 5. சவுரப் திவாரி, 6. குருணால் பாண்ட்யா, 7. பொல்லார்ட், 8. நாதன் கவுல்டர் நைல், 9. ஜேம்ஸ் பேட்டின்சன், 10. ராகுல் சாஹர், 11. தவால் குல்கர்னி.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:
1. டேவிட் வார்னர், 2. சகா, 3. மணிஷ் பாண்டே, 4. கேன் வில்லியம்சன், 5. பிரியம் கார்க், 6. ஜேசன் ஹோல்டர், 7. அப்துல் சமாத், 8. ரஷித் கான், 9. ஷாபாஸ் நதீம், 10. சந்தீப் சர்மா. 11 டி நடராஜன்.