மறைந்த காமெடி நடிகரான வடிவேல் பாலாஜி அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.
விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்களை சிரிக்க வைத்தவர் வடிவேல் பாலாஜி. இவரின் நினைவு தினத்தை முன்னிட்டு பல பிரபலங்கள் அவருடன் இருந்த நினைவுகளை தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருத்தம் தெரிவித்து வருகின்றனர். டிவி, ஷோக்கலில் மட்டுமல்லாமல் சின்னத்திரை, வெள்ளித்திரை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.
இவரின் மறைவு ஒட்டுமொத்த மக்களிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியது. 45 வயதான வடிவேல் பாலாஜி இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இரு கை, கால்களும் வாதத்தால் முடங்கியது. அதன் பிறகு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் போதிய பண வசதி இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு அவர் செப்டம்பர் 10 ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் அவர் இறந்து 2 ஆண்டுகளான நிலையில் அவரின் ரசிகர்கள் பலரும் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றன.
அந்த வகையில் வடிவேல் பாலாஜியின் 2ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ‘குக் வித் கோமாளி’ புகழ் உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், “நீங்கள் இல்லை என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. என் வாழ்க்கை வழிகாட்டியான நீ. முக்கிய தருணங்களில் இல்லாமல் போய்விட்டாயே, என்பதை நினைக்கும்போது கண்கள் கலங்குகிறது, மிஸ் யூ” என்று வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். பலரையும் சிரிக்க வைத்த வடிவேல் பாலாஜி கடந்த 2020ல் மாரடைப்பால் உயிரிழந்தார்.