திரைத்துறையில் வாழ்வில் ஒளி வீச வழி வகுத்ததுக்கு நன்றி என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க உத்தரவு பிறப்பிக்கபட்டதை தொடர்ந்து வினியோகஸ்தர் சங்க தலைவரும், நடிகர் மற்றும் இயக்குநருமான டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்துள்ளனர். இதனை குறித்து, டி.ராஜேந்தர் கூறியதாவது, தியேட்டர்களை நவம்பர் 10ம் தேதி திறக்கவுள்ளனர். அதில் 50 சதவீத இருக்கையுடன் இயங்க அனுமதி வழங்கி, திரைத்துறையினரின் வாழ்வில் ஒளி வீச வழி வகுத்து, தமிழக திரையுலகிற்கு நம்பிக்கை ஒளி ஏற்றிய, ஒளிவிளக்கு புரட்சித்தலைவர் வழி வந்த புரட்சித் தலைவி அம்மா அரசுக்கும், மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! இவ்வாறு அவர் கூறினார்.