Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“வாழ வேண்டும் என்றால் இதை செய்” பெண்ணுக்கு நடந்த கொடுமை…. கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு….!!

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் உள்பட மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆனத்தூர் கம்பர் தெருவில் பஞ்சமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி(32) என்ற மகள் உள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமிக்கு வெங்கடேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வெங்கடேசன் அவரது தாயார் மற்றும் உறவினர் ஆறுமுகம் மனைவி குமாரி ஆகிய மூன்று பேரும் இணைந்து நீ தொடர்ந்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்றால் 40 பவுன் தங்க நகை மற்றும் ஐந்து லட்ச ரூபாய் பணம் வரதட்சணையாக தர வேண்டும் என கூறி லட்சுமி கொடுமைப்படுத்தியுள்ளனர்.

மேலும் வரதட்சணை வாங்கி வரவில்லை என்றால் விவாகரத்து பெற்று செல்லுமாறு கூறியதோடு, கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து லட்சுமி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வெங்கடேசன் அவரது தாயார் மற்றும் குமாரி ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |