மத்திய அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் அகவிலைப்படி 25 விழுக்காடாக மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்க சில தினங்களுக்கு முன்பு அரசு ஒப்புதல் அளித்தது. இந்த அறிவிப்பானது நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகை படி உயர்த்தப்பட்டுள்ளதாக சில தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி வீட்டு வாடகை படி தொகை உயர்வு ஆகஸ்ட் மாதம் சம்பளம் முதல் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு அகவிலைப்படி 25 சதவீதத்திற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக வீட்டு வாடகைப்படி 27% உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரசு வெளியிட்ட உத்தரவின்படி, அகவிலைப்படியை 25 சதவீதத்துக்கும் மேல் உயர்த்தப்பட்டால் வீட்டு வாடகை படியும் அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளது. எனவே தற்போது அகவிலைப்படி உயர்வு காரணமாக வீட்டு வாடகை படி உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு நகரத்துக்கும் ஏற்ப வீட்டு வாடகைப்படி மாறுபடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.