Categories
தேசிய செய்திகள்

வாவ்! இனி பெண்களும் சேரலாம்…. மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்…!!!

இந்திய ராணுவ அகாடமி(IMA), அதிகாரிகள் பயிற்சி அகாடமி(OTA), தேசிய பாதுகாப்பு அகாடமி(NDA) ஆகிய மூன்று வழிகளில் இந்திய ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் நடைமுறை நடைபெறுகிறது. இவற்றில் முப்படைகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்யும் நோக்கில் பயிற்சிகள் நடைபெறும். இந்த அகாடமியில் பயிற்சி பெற நுழைவுத் தேர்வு கட்டாயம். 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் நுழைவுத்தேர்வு எழுதி பயிற்சிகளை பெறலாம். ஐ.எம்.ஏ., ஓ.டி.ஏ. யில் ஆண், பெண் என இருபாலருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

ஆனால் என்.டி.ஏ அகாடமியில் ஆண்கள் மட்டுமே நுழைவுத்தேர்வு எழுதிவந்த நிலையில் பெண்களும் இந்த அகாடமியில் நுழைவுத்தேர்வு எழுதி பயிற்சி அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தும், மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தில் பெண்கள் சார்பாக பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் 5ஆம் தேதி யுபிஎஸ்சி ஆல் நடத்தப்பட்ட NDA அகடமி நுழைவுத் தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்களுக்கு நிகராக பெண்களையும் பதவிகளில் அமர்த்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |