கேரளாவில் பாரத் பென்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள சுற்றுலா கேரேவன் வாகனத்தை நாட்டின் சுற்றுலா துறை மந்திரி அறிமுகம் செய்து வைத்தார்.
கேரளாவில் சுற்றுலா வரும் பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் இயற்கைக்கு மிக நெருக்கமான பயணத்தை உருவாக்கும் வகையில் கேரள அரசு கடந்த 15ஆம் தேதி ஒரு விரிவான கேரவன் சுற்றுலா கொள்கையை வெளியிட்டது. அதன் ஒரு பகுதியாக பாரத் பென்ஸ் நிறுவனத்தின் சுற்றுலா கேரவனை கேரளா சுற்றுலா துறை மந்திரி முகமது ரியாஸ் மற்றும் போக்குவரத்து துறை மந்திரி ஆண்டனிராஜ் ஆகியோர் நேற்று அறிமுகம் செய்து வைத்தனர். கேரளாவில் கேரவன் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே வாரத்தில் இந்த கேரவன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த கொள்கையின் கீழ் அனைத்து நிறுவனங்களும் மற்றும் தனியார் நபர்களும் தங்கள் கேரவன் வாகனங்களை வெளியிடலாம் என சுற்றுலா துறை தெரிவித்துள்ளது. மேலும் சோபா , படுக்கை ,குளிர்சாதன பெட்டி, மற்றும் மைக்ரோ வேவ் சமையலறை, டைனிங் டேபிள், கழிவறை, ஏசி, இன்டர்நெட் வசதி, ஜிபிஎஸ் போன்ற அனைத்து வசதிகளும் கொண்ட இந்த கேரவனில் பயணம் செய்வதற்கு மிகவும் எளிமையாகவும், பிரத்தியேகமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா துறை மந்திரி கூறினார்.