எல்காட் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் தமிழ்நாடு மிண்ணனு நிறுவனத்தின் துறை ரீதியான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ், “பழமைவாய்ந்த நிறுவனமான எல்காட் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில் நிதி மேலாண்மை குறித்து திட்டங்கள் வகுத்து கையேடு உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல்வரின் உத்தரவின்படி, திருநெல்வேலி, ஒசூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான இடம் கண்டறியப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது” என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், புதுவேகத்துடன் எல்காட் நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கணிணி வாங்குவதற்காக அரசு சார்ந்த நிறுவனங்கள் எல்காட் இணையதளத்தினை பயன்படுத்தி தரமான பொருட்களை நல்ல விலையில் பெற முடிகிறது. இது மிகப்பெரிய சாதனை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.