தமிழ் திரையுலகில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான நகுலின் மனைவி ஸ்ருதி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.
தமிழ் திரையுலகில் நகுல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து அவர் காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது நகுல் வாஸ்கோடகாமா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இவ்வாறு இருக்க நகுலுக்கும், அவரது மனைவி ஸ்ருதிக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் நகுலின் மனைவி ஸ்ருதி மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். இதுகுறித்து அவர்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வருகின்ற ஜூன் மாதம் தங்களது 2 ஆவது குழந்தை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்கள்.