கமல்ஹாசன் 1985ஆம் ஆண்டில் வெளியான “Geraftaar” என்ற பாலிவுட் படத்தில் அமிதாப் பச்சனுடன் சேர்ந்து நடித்துள்ளார். பின்னர் “கபர்தார்” எனும் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். ஆனால் அதன் பிறகு இருவரும் இணைந்து எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் பல வருடங்கள் கழித்து இருவரும் விக்ரம் படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். மேலும் அவரது ஷூட்டிங்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 4 முதல் 6 மணி நேரத்தில் முடித்து விட்டார் எனவும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.