தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை எத்திராஜ் கல்லூரியின் நிறுவனர் நாள் விழாவில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, பெண்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் 33 சதவீத இட ஒதுக்கீடு, அரசு பணிகளில் இட ஒதுக்கீடு போன்ற உரிமைகளை கலைஞர் கொண்டு வந்தார். தற்போது பெண்கள் நலனுக்காக அரசு பேருந்தில் இலவச பயண திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார். மேலும் அறநிலையத்துறை சார்பில் பெண்களுக்காக சென்னையில் 2 மகளிர் கலைக் கல்லூரி தொடங்கப்படும் என்றும், இதற்கான அறிவிப்பை முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.