Categories
தேசிய செய்திகள்

வாவ்… ஜியோவின் புதிய ஸ்மார்ட்போன்…  அதுவும் இந்த தீபாவளிக்கே…  சுந்தர் பிச்சையின் அப்டேட்…!!!

கூகுள் உடன் இணைந்து ஜியோ நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய ஸ்மார்ட்போன் தீபாவளிக்கு அறிமுகமாக உள்ளதாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்துடன் ஜியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள ஜியோ போன் நெக்ஸ்ட் என்ற பெயரிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்ட்டை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு என பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் சாதாரணமாக செல்போன் பயன்படுத்துபவர்களை ஸ்மார்ட்போனுக்கு மாற்ற வழிவகை செய்யும் என்று சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதன்முறையாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களுக்கு வாய்ஸ் அசிஸ்டன்ட், மொழி பெயர்ப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் தயாரிக்கபட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 3500 என்ற விலையில் இந்த ஸ்மார்ட்போன் தீபாவளிக்கு விற்பனைக்கு வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |