விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நானி, நஸ்ரியா நசீம் நடித்திருக்கும் படம் `அன்டே சுந்தரானிகி’. இந்தப் படத்திலிருந்து நானி மற்றும் நஸ்ரியாவுக்கான டீசர் ஏற்கெனவே வெளியானது. விவேக் சாகர் இசையமைத்திருக்கும் இப்படத்திலிருந்து `பஞ்ச கட்டு’ என்ற பாடலை சமீபத்தில் வெளியிட்டனர்.
படத்தை ஜூன் 10ம் தேதி வெளியிட உள்ளனர். தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழ் மற்றும் மலையாளத்திலும் இந்தப் படத்தை வெளியிட உள்ளனர். தமிழில் இந்தப் படத்திற்கு `அடடே சுந்தரா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் டீசர் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது.