Categories
தேசிய செய்திகள்

வாவ்….! வாரத்தில் இனி 4 நாட்கள் வேலை….. 3 நாட்கள் விடுமுறை….. வரப் போகுது புது ரூல்ஸ்…..!!!!!

புதிய ஊதிய விதி அமலுக்கு வந்தவுடன் வேலை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. விரைவில் 4 தொழிலாளர்கள் குறியீடு அமலுக்கு வர உள்ளது. இந்த விஷயத்தில் 90% மாநில தொழிலாளர்கள் சட்ட விதிகளை உருவாக்கி விட்டதாகவும் விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த விதிகள் அமலுக்கு வந்த பிறகு சம்பளம், அலுவலக நேரம் முதல் பிஎஃப் பென்சன் வரை பல்வேறு விதிகளில் மாற்றம் இருக்கும். தொழிலாளர் துறையில் பணிபுரியும் முறைகள் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் தேவைக்கு ஏற்ப இந்த புதிய சட்டம் இருக்கும்.

புதிய ஊதிய குறியீட்டில் 30 நிமிடங்களை கணக்கிட்டு கூடுதல் நேரத்தில் 15 முதல் 30 நிமிடங்கள் கூடுதல் வேலை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வேலை நேரத்தை 12 நேரமாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இது 4-3  என்கிற விகிதத்தில் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது நான்கு நாட்கள் அலுவலகம், மூன்று நாட்கள் வார விடுமுறை. ஒவ்வொரு 5 மணி நேரத்திற்கு பிறகு பணியாளர்களுக்கு 30 நிமிட இடைவெளி என்று பல்வேறு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஊதிய விதியால் பிஎஃப் தொகை அதிகரிக்கும்.

அதோடு கிராஜுவிட்டி பங்களிப்பும் அதிகரிக்கும். கையில் வாங்கும் சம்பளத்தை குறைப்பது  ஓய்வூதியத்தில் கிடைக்கும். ஒரு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் நிறுவனத்தின் செலவில் 50 சதவீதத்திற்கு குறைவாக இருக்கக்கூடாது. இந்த புதிய ஊழியர் சட்டம் அமலுக்கு வந்த பிறகு ஊழியர்களின் கையில் வாங்கும் சம்பளம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |