Categories
தேசிய செய்திகள்

வாவ்! 12 ஆண்டுகளுக்கு பின் பூத்த நீலக்குறிஞ்சி மலர்…. சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி…!!!

நீலக்குறிஞ்சி என்பது இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் ஒரு செடியாகும். இதில் பூத்துக் குலுங்கும் நீல மலர்களினால் இம்மலைப் பிரதேசம் நீல நிறத்தில் தோன்றுவதால், தென்னிந்தியாவில் இம்மலைத் தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் வந்தது. 12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் இந்த குறிஞ்சி பூக்களை காண்பது மிகவும் அரிது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மண்டல்பட்டி மலைப்பகுதியில் 12 ஆண்டுகளுக்குப் பின் நீலக்குறிஞ்சி மலர் பூத்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் காணப்படும் இந்த நீலக் குறிஞ்சி மலர்கள் பார்ப்பது மிகவும் அரிது. மண்டல்பட்டியில் இந்த நீலக் குறிஞ்சி மலர்கள் பூத்து இருப்பதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அதன் அருகே நின்று படம் பிடித்து தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Categories

Tech |