தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.
அந்தவகையில் சமத்துவ மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், “அதிமுகவினர் வாஷிங் மெஷின் இலவசமாக கொடுப்பேன் என்று கூறுகின்றனர். ஆனால் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசத்தை கூட இலவசமாக கொடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.