அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் பாகிஸ்தானுக்கு சொந்தமான மூன்று தூதராக கட்டிடங்கள் அமைந்துள்ளது. அதில் வாஷிங்டன் வடகிழக்கு சர்வதேச கோர்ட்டுக்கு அருகே அமைந்துள்ள கட்டிடத்திலும், இதே போல் வாஷிங்டனின் மாகாணம் மாஸசூசெட்ஸ் அவின்யூவில் உள்ள ஒரு கட்டிடத்திலும் பாகிஸ்தான் தூதரகம் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்த கட்டிடம் செயல்பாட்டில் இல்லை இதற்கிடையே வாஷிங்டனின் வடமேற்கில் ஆர் ஸ்ட்ரீட் பகுதியில் 1950 -ஆம் வருடம் முதல் 2000 வருடம் வரை பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு பிரிவு இந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் ஆர் ஸ்ட்ரீட் தெருவில் உள்ள கட்டிடத்தை விற்பனை செய்ய பாகிஸ்தான் முடிவெடுத்து அதனை வாங்க விருப்பமுள்ளவர்கள் ஏலத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் தூதரக கட்டிடத்தை வாங்குவதற்கு யூத குழுவும், இந்தியாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் யூத குழு ஒன்று இந்த கட்டிடத்தை 6.8 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்க ஏல ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது.
அதே சமயம் 5 மில்லியன் டாலருக்கு வாங்க இந்திய தொழில் அதிபர் ஒப்பந்த புள்ளி கோரியுள்ளார். இதற்கிடையே பாகிஸ்தானை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர் இந்த கட்டிடத்தை 4 மில்லியன் டாலருக்கு வாங்க ஒப்பந்த புள்ளி கோரியுள்ளார். இந்நிலையில் அதிக ஏலத்திற்கு கேட்டுள்ள யூதக் குழுவிற்கு பாகிஸ்தான் தூதரகம் கட்டிடத்தை விற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேலை இந்த கட்டிடம் யூத குழுவிற்கு விற்பனை செய்யப்படும் பட்சத்தில் அந்த கட்டிடத்தை யூத மத வழிபாட்டு தளமாக மாற்றி அமைக்க அந்த குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.