Categories
விளையாட்டு

வாஷிங்டன் சுந்தருக்கு காயம்…. ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இடம்பெறுவாரா ?…. விரைவில் வெளியாகும் அறிவிப்பு….!!!!

இந்திய அணியானது 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே செல்ல இருக்கிறது. ஷிகர்தவான் தலைமையிலான இந்திய அணியில் தமிழகவீரர் வாஷிங்டன் சுந்தர் இடம்பெற்றிருந்தார். இப்போது அவர் காயமடைந்துள்ளதால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறுவாரா என்பது கேள்விகுறியாக இருக்கிறது.

மான்செஸ்டரில் நடைபெற்ற ராயல் லண்டன் ஒரு நாள் கோப்பை போட்டியில் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வந்தார். வொர் செஸ்டர்ஷயர் அணிக்கு எதிராக லங்காஷயர் அணிக்காக களமிறங்கும்போது வாஷிங்டன் சுந்தர் இடதுதோளில் பலத்த காயம் ஏற்பட்டது. தற்போது ஜிம்பாப்வே சுற்றுப் பயணத்திற்கு வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதால் காயம் ஒரு பெரிய பயமாக இருக்கிறது. பிப்ரவரி 2022 முதல் சுந்தர் இந்தியாவிற்காக விளையாடவில்லை.

ஏனெனில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென்ற வருடம் டி20 உலகக்கோப்பையை சுந்தர் தவறவிட்டார். பிப்ரவரி மாதத்தில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடருக்குப் பின் சுந்தர் ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை. IPL 2022 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் முதல் ஆட்டத்தில் 9 போட்டிகளில் மட்டுமே விளையாடியஅவர், கையில் ஏற்பட்ட காயத்தால் விலகினார்.

Categories

Tech |