தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதை அடுத்து வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அன்று 30 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மாதம் இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திய இலங்கை தமிழக அரசு அடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் கரூரில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் குலுக்கல் முறையில் வாஷிங் மெஷின் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குலுக்கல் முறையில் கிரைண்டர், மிக்ஸி, பூக்காரி என 100 பேருக்கு பரிசு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் அறிவித்துள்ளார்.