Categories
ஆன்மிகம் இந்து

வாஸ்து தோஷத்தை போக்க வேண்டுமா…? இந்தப் பொருளை கண்டிப்பா உங்க வீட்டில வையுங்க… நல்லதே நடக்கும்…!!!

சோழிகளில் மொத்தம் 120 வகை சோழிகள் இருப்பதாக நூல்கள் கூறுகின்றன. ஆனால் தற்போது குறைந்த அளவு சோழிகளே இருக்கின்றது. எந்த வகையாக சோழியாக இருந்தாலும் நம் வீட்டில் வைத்திருப்பது வாஸ்து தோஷத்தை நீக்கக் கூடியது என்று கூறுகிறார்கள். சோழிகளை நாம் பிரசன்னம் பார்ப்பதற்கும் விளையாடுவதற்கும் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். எப்படிப்பட்ட சோழியாக இருந்தாலும் நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். பொதுவாக கடலில் இருந்து எடுக்கப்படும் எந்த ஒரு பொருளும் மகாலட்சுமிக்கு இணையாக கூறுவார்கள். உங்கள் வீட்டில் அதிர்ஷ்டம் நிறைய சோழிகளை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.

இதை வைத்து ஒரு பரிகாரம் செய்யலாம். இப்படி செய்யும்போது மகாலட்சுமி மனநிறைவோடு வீட்டில் வாசம் செய்வாள் என்பது புராணங்கள் கூறும் ஐதீகம். ஒரு கண்ணாடி அல்லது பீங்கானால் செய்யப்பட்ட ஒரு குவளையில் பகுதி அளவு தண்ணீரை ஊற்றி 5 சாதாரண வெள்ளை சோழி, ஒரு கருப்பு சோழி இவற்றை எடுத்துக் கொண்டு, மூன்று வெள்ளை சோழிகளை நிமிர்த்தியவாறு போட வேண்டும். மற்ற 1 கருப்பு சோழி, 2 வெள்ளைச் சோழி ஆகியவற்றை கவிழ்த்து போட வேண்டும். அதாவது மூன்று சோழிகள் நிமிர்ந்தவாறும். மற்ற மூன்று சோழிகள் கவிழ்ந்தவாறும் இருக்க வேண்டும். இது ஒரு வாஸ்து சாஸ்திர முறையாகும். இப்படி செய்யும்போது உங்கள் வீட்டில் வாஸ்து சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனை இருந்தாலும் அது நீங்கிவிடும்.

Categories

Tech |