கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கிராமத்தில் 4 வயது சிறுமி வீட்டிற்கு அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கண்ணன்(65) என்பவர் விளையாட சொல்லலாம் என கூறி சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.