தலைமை நீதிபதி பாப்டே கான்ஷ்யாமின் மனு குறித்து கேள்விக்கணைகளை தொடுத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் கடந்த ஜூலை பத்தாம் தேதி எட்டு காவலர்களை கொலை செய்த வழக்கு மற்றும் 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய விகாஸ் துபே என்ற ரவுடி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு துபே மற்றும் அவரின் கூட்டாளிகளின் என்கவுண்டர் தொடர்பான வழக்கினை விசாரிக்க அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த விசாரணை குழுவில் இருந்து நீதிபதி சவுகானை நீக்க கன்ஷயம் உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சவுகானின் சகோதரர் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார். அவரின் மகள் நாடாளுமன்ற உறுப்பினரை திருமணம் செய்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாட்டே தலைமையிலான அமர்வு வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்து உத்தரவிட்டது. நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளும்படியான ஆலோசனைகளை மனுதாரரிடம் கேட்டுள்ளது.
இதுகுறித்து ” கன்ஷுயமின் மனுவை அடிப்படையாகக்கொண்டு முன்னாள் நீதிபதியை சந்தேகிக்க முடியாது. வேறு எந்த உறவினர் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்? நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிபதிகளின் உறவினர்களாக இருக்கும் காரணத்தால் விசாரணை நியாயமாக இருக்காதா? நீதிபதிகள் அனைவரும் நடுநிலைமை இன்றி செயல்படுகிறார்கள் என சொல்கிறாரா? அரசியல் கட்சிகளில் சட்டவிரோதமானதா?” என்ற கேள்விகளை பாப்டே எழுப்பியுள்ளார்.