என்கவுண்டர் செய்யப்பட்ட விகாஸ் துபே வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் 8 காவல்துறை அதிகாரிகளை கொன்ற பிரபல ரவுடியான விகாஸ் துபே நேற்று காவல்துறை அதிகாரிகளால் என்கவுன்டர் செய்யப்பட்டார். அவரது வீடும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ரவுடியின் மரணம் நாடு முழுவதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில், அவரது வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக்க பிரபல தயாரிப்பாளர் சந்தீப் கபூர் முடிவெடுத்துள்ளார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக தேசிய விருது பெற்ற மனோஜ் பாஜ்பாயை படக்குழு தேர்வு செய்தது. ஆனால் அவர் இதில் நடிக்க மாட்டேன் என மறுத்ததாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தற்போது அவருக்கு பதிலாக விகாஸ் துபேவாக யாரை நடிக்க வைக்கலாம் என படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.