விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா ஸ்டோரியை பார்த்தவர்கள் ஒரே லவ்வு தான் என கூறி வருகின்றார்கள்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் நயன்தாரா. இவர் சென்ற ஜூன் மாதம் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் அஜித்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் பைக்கில் வளம் வரும் பொழுது கார்க்கில் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளார். அப்பொழுது அஜித்தை பார்த்த ராணுவ வீரர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். இதை பார்த்த ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு அஜித் மீது எவ்வளவு பாசம். ஒரே லவ்வாகத்தான் இருக்கிறது என கூறி வருகின்றார்கள்.