விக்னேஷ் சிவனுக்கு துபாயில் இருக்கும் புர்ஜ் கலிஃபாவுக்கு அடியில் நயன்தாரா சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்துள்ளார்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். சொல்லப்போனால் தமிழ் நடிகைகளில் அதிக ரசிகர்களை கொண்டவர் இவர்தான் என்றே சொல்லலாம். இவர் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் காதலில் விழுந்துவிட்டார். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே. எனவே ரசிகர்கள் இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தனர்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார் நயன்தாரா. அதன்படி விக்கி -நயன் இருவரின் திருமணமும் கடந்த ஜூன் 09ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் க்ராண்ட் ரிசார்ட்டில் தங்களுடைய நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், முக்கிய நடிகர்கள் முன்னிலையில் மிக பிரம்மாண்டமாக நடந்தது.
இவர்கள் முதலில் தேனிலவுக்கு தாய்லாந்து சென்றார்கள். பிறகு ஸ்பெய்னுக்கு சென்றார்கள். இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றார். இதற்கு நயன்தாரா துபாயில் இருக்கும் புர்ஜ் கலிஃபாவுக்கு அடியில் நள்ளிரவில் சர்ப்ரைஸ் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் விக்கியின் அம்மா மற்றும் சகோதரியையும் துபாய்க்கு வரவழைத்திருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து விக்னேஷ் சிவன் கூறியுள்ளதாவது, என் மனைவி, என் தங்கம் சர்பிரைஸ் கொடுத்தார். புர்ஜ் கலிஃபாவுக்கு கீழ் எனக்கு முக்கியமானவர்களுடன் பர்த்டே பார்ட்டி. இதைவிட ஸ்பெஷல் இருக்க முடியாது. எப்பொழுதும் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் என கூறியுள்ளார்.