நயன்தாரா விக்னேஷ் சிவனை எப்போது திருமணம் செய்வார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது
பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. திருமணத்திற்கு முன்பே இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வருவது அவ்வப்போது வெளியான தகவல். அவர்கள் இருவரும் கூட இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவலுக்கு விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்ததோடு சினிமாத்துறையில் இருவரும் சாதிக்க நினைக்கிறோம் சாதித்த பிறகுதான் திருமணம் என்று அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்நிலையில் திருமணம் குறித்து நயன்தாரா முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் எப்போது தேசிய விருது பெறுகிறாரோ அதன் பிறகுதான் திருமணம் என்று நயன்தாரா முடிவெடுத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். நயன்தாரா நடித்து வெளியான அறம் படத்திற்காக தேசிய விருது கிடைக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களினால் அது கைதவறி போனது. தேசியவிருது கிடைக்கவில்லை என்றால் இருவரது காதல் என்ன ஆகும் என்ற குழப்பமும் அதிர்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.