விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரௌடிதான் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதன்பின் இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியிருந்தார். தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர் .
#TwoTwoTwo from #KaathuVaakulaRenduKaadhal arriving on SEPTEMBER 18th to get you hooked! 🥳💃
A rockstar @anirudhofficial musical! 😎🥁@VigneshShivN @VijaySethuOffl #Nayanthara @Samanthaprabhu2 @7screenstudio @Rowdy_Pictures #HappyVinayagarChaturthi pic.twitter.com/ksmlL2yZ5g
— Sony Music South (@SonyMusicSouth) September 10, 2021
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரௌடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 18-ஆம் தேதி இந்த படத்தில் இடம்பெற்ற ‘டூ டூ டூ’ என்கிற பாடல் வெளியாகவுள்ளது .