மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவது குறித்து வித்தியாசமான ட்வீட் போட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன் .
தமிழ் திரையுலகின் நட்சத்திர நாயகனாக வலம் வரும் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா மோகனனும் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த இந்த படம் கொரோனா ஊரடங்கால் தாமதமானது. தற்போது மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Pongal andru Oru Deepavali (ku) thayaaraaguvom 🤩😇
Much awaited , much expected
Hopefully the universe makes it a wonderful experience for the audience!And I wish life turns back to normal for cinema & theatres !
Dear Corona – “Adichadhu podhum da Quit Pannuda “ 🙏🏻🙏🏻🙏🏻😌 https://t.co/jEIC4gLerM
— VigneshShivan (@VigneshShivN) December 29, 2020
இதனை ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாவது குறித்து வித்தியாசமாக பதிவிட்டுள்ளார். அதில் ‘பொங்கல் அன்று ஒரு தீபாவளிக்கு தயாராகுவோம் . மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் . மீண்டும் பழையபடி தியேட்டர்கள் செழிக்க வாழ்த்துகிறேன் . டியர் கொரோனா அடிச்சது போதும் டா கொயட் பண்ணுடா’ என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் எக்கச்சக்க கமெண்ட்ஸை குவித்துள்ளனர் .