Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷ் சிவன் அப்படி சொன்னதால் தான் நடித்தேன்… பதம் குமார் பேட்டி…!!

இயக்குனர் விக்னேஷ் சிவன் என்னை நடிகராக்குகிறேன் என்று சொன்னதால்  நடித்தேன் என பதம் குமார் கூறியுள்ளார் .

தமிழ் திரையுலகில் நான்கு  முன்னணி இயக்குநர்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் ‘பாவக் கதைகள்’. இதில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக்கிய ‘லவ் பண்ணா உட்ரணும்’ படத்தில் நடிகை அஞ்சலிக்கு அப்பாவாக நடித்தவர் பதம் குமார் . இந்த படத்தில் சிறப்பாக நடித்த இவருக்கு தற்போது வில்லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்துள்ளது . இந்நிலையில் பதம் குமார் அளித்துள்ள பேட்டியில் ‘என் அப்பா வேணு தெலுங்கு சினிமாவில் பிரபல ஒளிப்பதிவாளர் . தொடக்கத்தில் நான் ஒளிப்பதிவாளராக இருந்தேன் . 3 ஹிந்தி படங்கள் இயக்கினேன் .

Paava Kadhaigal Review: Netflix's debut Tamil original is striking, intense  and hard hitting!

பின்னர் தயாரிப்பு வினியோகத்தில் இறங்கினேன் . ஆஹா கல்யாணம், போடா போடி ஆகிய திரைப்படங்கள் என் தயாரிப்பு தான் . அடுத்ததாக என் தயாரிப்பில் பங்கஜ் திரிபாதி நடிப்பில் ஹிந்தி படம் தொடங்க உள்ளது . இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘நீங்கள் என்னை இயக்குனர் ஆக்குனீர்கள் , நான் உங்களை நடிகராக்குகிறேன்’ என்று உணர்வுபூர்வமாக சொன்னதால் நடித்தேன். தற்போது எனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது . இனி நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவும் திட்டமிட்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

Categories

Tech |