இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் நடிகை சமந்தா இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் ஹிட் கொடுத்ததுள்ளது. தற்போது இவர் இயக்கத்தில் தயாராகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர் . அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் . சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து நடிகை சமந்தா படத்தில் இருந்து விலகியதாக வலைத்தளங்களில் கசிந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பூஜை நாளில் வெளியான அறிவிப்பு போஸ்டரில் சமந்தாவின் பெயரை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் தற்போது சமந்தா இணைந்துள்ளார் . ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த ‘நானும் ரவுடிதான்’ படம் ஹிட்டானதை தொடர்ந்து இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது