Categories
சினிமா தமிழ் சினிமா

“விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்த ஓடிடி தளம்”…. காரணம் என்ன…?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும்  கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததையடுத்து கடந்த ஜூன் 9 ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலமலகமாக திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் பல கட்டுப்பாட்டுகளுடன் நடைபெற்ற இவரது திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ஒளிபரப்பு செய்வதாக தெரிவித்திருந்தனர்.

மேலும் இதன் பொறுப்பு பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவிடம்  ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரபல ஓடிடி நிறுவனம் அதிரடி முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதாவது திருமணம் முடிந்த பின் இயக்குனர் விக்னேஷ் சிவன் சில புகைப்படங்களை ஊடகங்களுக்கு பகிர்ந்துள்ளார். அதன்பின் சில புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகின்றது. இதனால் ஓடிடி நிறுவனம் தங்களுடைய அனுமதி இல்லாமல் புகைப்படங்களை பகிர்ந்தது ஒப்பந்தத்தை மீறியதாக கருதி ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Categories

Tech |