கோப்ரா திரைப்படத்திற்கு அடுத்தடுத்து சோதனைகள் வந்து கொண்டிருக்கின்றது.
இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி, இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்ட் 31 வெளியாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் நடிகர் விக்ரம் 8 வேடங்களில் நடித்துள்ளார். சுமார் 3 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள், திரையரங்குகள் முன் திருவிழாவை போல கொண்டாடினர். நடிகர் விக்ரம் ஒவ்வொரு வேடங்களிலும் மிரட்டி இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றார்கள்.
இத்திரைப்படம் விக்ரம் ரசிகர்களை கவர்ந்த அளவிற்கு பொதுவான ரசிகர்களை கவரவில்லை. இதனால் படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதே பொதுவான விமர்சனமாக இருக்கின்றது. மேலும் முதல் நாளில் நல்ல வசூலை குவித்து நிலையில் இரண்டாவது நாளில் குறைய ஆரம்பித்தது. இந்த நிலையில் கோப்ரா திரைப்படம் ஆன்லைனில் கசிந்திருக்கின்றது. Tamil rockers, Filmyzilla, telegram, movierulz உள்ளிட்ட இணையத்தில் கசிந்து இருக்கின்றது. முதல் நாளில் வசூல் செய்த அளவில் இப்படம் இரண்டாவது நாள் வசூல் செய்யாத நிலையில் தற்போது ஆன்லைனிலும் கசிந்து இருப்பது படக்குழுவை அதிர்ச்சடைய செய்திருக்கின்றது.