Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரமின் கோப்ரா திரைப்படம்… புதிய அப்டேட் கொடுத்த பட குழு…!!!!!

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கின்ற திரைப்படம் கோப்ரா. விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கின்றார். மேலும் கே எஸ் ரவிக்குமார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான்விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லலித் குமார் தயாரித்திருகின்ற இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படத்தின்  இறுதி  கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கோப்ரா திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட்டை பட குழு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி கோப்ரா படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தின் டிரைலர் அடுத்த வாரத்தில் வெளியாகப்படும் என கூறப்படுகின்றது.

Categories

Tech |