‘சியான் 60’ படத்தில் ‘பேட்ட’ பட நடிகர் சனந்த் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துரு விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள ‘சியான் 60’ படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் .
Welcome onboard Sananth 😊😊 #Chiyaan60 #ChiyaanVikram #DhruvVikram
A @karthiksubbaraj padam..
#BobbySimha @SimranbaggaOffc @vanibhojanoffl @Music_Santhosh @theSreyas @proyuvraaj pic.twitter.com/DyDSNNl7KK
— Seven Screen Studio (@7screenstudio) March 17, 2021
மேலும் இந்த படத்தில் சிம்ரன் ,வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது . இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சனந்த் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.