துருவ நட்சத்திரம் திரைப்படம் இரண்டு பகுதிகளாக ரிலீஸ் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கிற திரைப்படம் “துருவ நட்சத்திரம்”. இப்படத்தில் ஹீரோவாக விக்ரம் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களான ராதிகா சரத்குமார், சிம்ரன், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பல ஆண்டுகளாகவே எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தற்போது விக்ரம் டப்பிங் பணியை ஆரம்பிக்க போவதாக தகவல் கசிந்துள்ளது.
இத்திரைப்படத்தின் பிளேயிங் நேரம் நான்கரை மணி நேரம் என்பதால் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என இயக்குனர் கவுதம் மேனன் முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக அதிகாரபூர்வமான செய்திகள் கூடிய சீக்கிரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றன.