திருச்சியில் விக்ரமை காண வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிப்பில் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி கோப்ரா திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக விக்ரம் மற்றும் கோப்ரா பட குழுவினர் உள்ளிட்ட 9 பேர் இன்று காலை 8:20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்றார்கள். அங்கு அவர்களை வரவேற்க ரசிகர்கள் ஏராளமானோர் விமான நிலையத்தில் திரண்டிருந்தார்கள்.
விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த விக்ரமை பார்த்து ரசிகர்கள் ஆர்வம் மிகுதியில் அவரை சூழ்ந்து கொண்டு ஆரவாரத்தில் ஈடுபட்டனர். மேலும் பலர் முந்தி எடுத்துக் கொண்டு அவருக்கு முன்பாக நின்று செல்பி எடுக்க முயற்சி செய்தனர். பாதுகாப்பு கருதி போலீஸ்காரரும் விக்ரமை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்திருந்தனர். அப்போது அங்கிருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ரசிகர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இந்த சூழலில் அவர்களை மீறி ரசிகர்கள் விக்ரமை நெருங்க முயற்சி செய்தபோது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ரசிகர்களை அடித்து துரத்தியுள்ளனர். இதனால் விமான நிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் விக்ரமை பாதுகாப்புடன் அழைத்து சென்று காரில் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் இது பற்றி விக்ரம் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, அதே வேளையில் சில விரும்பத்தகாத சூழல் ஏற்பட்டதாக என் கவனத்திற்கு வந்திருக்கின்றது. அத்தகைய நிகழ்விற்கும் அசவுகரியத்திற்கும் என் வருத்தத்தை பதிவு செய்து கொள்கின்றேன். இங்கே இவரை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்” என தனது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் மற்றொரு பதிவில், “இன்று கோப்ரா திரைப்படம் முன்னோட்ட விழாவிற்கு திருச்சி வந்த என்னை வார்த்தைகளால் விவரிக்க இயலா வண்ணம் அன்பு மழையில் நனைய வைத்த என் ரசிகர்களுக்கு என்றும் அன்புக்கு உரித்தானவனாய் என் இதயம் கனிந்த நன்றிகள் என பகிர்ந்துள்ளார்.