இயக்குனர் ராஜகுமாரன் பேட்டி ஒன்றில் விக்ரம் பற்றி கூறியது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் விக்ரம். இந்நிலையில் விக்ரம் குறித்து இயக்குனர் ராஜகுமாரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியுள்ளதாவது, “விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது எனக்கும் விக்ரமுக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. எனக்கு சரத் கம்பெனியுடன் தான் பிரச்சனை ஏற்பட்டது.
சேது திரைப்படம் விக்ரமுக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தாலும் குடும்பங்களிடையே கொண்டாடும் படமாக விண்ணுக்கும் மண்ணுக்கும் திரைப்படம் தான் உள்ளது. கை, காலை உடைத்து கண்ணை மாற்றி நடிப்பது எல்லாம் நடிப்பு கிடையாது. “விக்ரம் ஒரு நல்ல நடிகர் கிடையாது”. ரஜினி மாதிரி நடிப்பாரு இல்லன்னா கமல் மாதிரி நடிப்பாரு. அவ்வளவுதான்” என்று கூறியுள்ளார். இதனால் ரசிகர்களிடையே ராஜகுமாரன் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.