மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியது. பட வெளியீட்டை முன்னிட்டு நள்ளிரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகளில் ஆரவரத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தத் திரைப்படம் வசூல் சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் இந்த படம் 40 முதல் 45 கோடியை முதல் நாள் வசூலாக ஈட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விக்ரம் படத்தில் நடிப்பதற்காக நடிகர் சூர்யா சம்பளம் வாங்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் கிளைமாக்ஸில் சூரிய 5 நிமிடம் மட்டுமே வருவார். அந்த ஐந்து நிமிட காட்சிகளில் சூரிய மிரட்டலாக நடித்திருப்பார். இதில் நடிப்பதற்காக சூர்யா ஒரு நாள்தான் கால்ஷீட் கொடுத்துள்ளார். இதனால் தனக்கு சம்பளம் வேண்டாம் விக்ரம் 3 யிக் பார்த்துக் கொள்ளலாம் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜிடம் சொல்லிவிட்டாராம்.