Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் தான் சரியான போட்டி … 5 கதாநாயகிகளுடன் அறிமுகமாகும் மருமகன்..!!

அறிமுகமாகும் முதல் படத்திலேயே விக்ரம் மருமகனுக்கு ஜோடியாக 5 நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள்.

விக்ரம் தங்கை அனிதாவினுடைய மகன் அர்ஜுமன் ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். அறிமுகமாகும் முதல் படத்திலேயே அவருடன் ஜோடியாக நடிக்க 5 நடிகைகள் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த படத்திற்கு “பொல்லாத உலகில் பயங்கர கேம்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விஜய்ஸ்ரீ ஜி டைரக்ட் செய்கிறார். அர்ஜுமன் அறிமுகமாகி நடிக்கும் முதல் படத்தில் அவருக்கு ஜோடியாக வரும் கதாநாயகி களின் பெயர்கள் பின்வருமாறு: ஐஸ்வர்யா தத்தா, அரித்ரா நாயர், ஆராதயா, சான்ட்ரியா, சாந்தினி.

பிக்பாஸ் புகழ் ஜூலி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் இடம்பெற்றுள்ள ‘யார் இவள்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பாடல் ரசிகர்களுக்கு இடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விக்ரம் மகன் துருவ், மருமகள் அர்ஜூமன் அகிய இருவரும் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கும் நிலையில் விக்கிரமும் ஹீரோவாக நடித்து வருகிறார். மகன், மருமகன் ஆகிய இருவருக்கும் சரியான போட்டி ‘விக்ரம்’ என ரசிகர்கள் பாராட்டிகளை வழங்கி வருகிறார்கள்.

Categories

Tech |