விக்ரம் திரைப்படத்தின் வெற்றி குறித்து கமல் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார். இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்தது.
இந்நிலையில் படம் சென்ற ஜூன் 3-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜ் படமாக இருக்கின்றது. கதாபாத்திரங்கள் தேர்வு, ஸ்கிரீன்பிளே, ஆக்சன் காட்சிகள் என அனைத்திலும் லோகேஷ் கனகராஜ் ஆதிக்கம் இருக்கின்றது. இத்திரைப்படம் சர்வதேச தரத்தில் இருப்பதாக பாராட்டுகள் குவிந்தது. லோகேஷ் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் செதுக்கியிருப்பதாக அவருக்கு பாசிட்டிவான கமெண்ட்டுகள் குவிந்தது.
இந்த நிலையில் கமல் அண்மையில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கான காரணம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, விக்ரம் திரைப்படம் ரசிகர்களால் தான் வெற்றி பெற்றது. அவர்களால் வெற்றியையும் தர முடியும், தோல்விகளையும் தர முடியும். எனவே அவர்களை ஈர்க்கும் வகையில் நாம் பட எடுக்கும் வேண்டும் எனக் கூறியுள்ளார்.