Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம்- துருவ் விக்ரமின் ‘மகான்’… ரிலீஸ் அப்டேட் இதோ…!!!

விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மகான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், மகான், கோப்ரா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மகான் படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Mahaan team unveils new poster, stills for Dhruv Vikram's birthday! Tamil  Movie, Music Reviews and News

சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு மோஷன் போஸ்டர்கள் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் மகான் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |