விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் மஹான் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன், மஹான், கோப்ரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மஹான் படத்தில் விக்ரமின் மகனும், நடிகருமான துருவ் விக்ரமும் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சிம்ரன், வாணிபோஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Set your reminders for 10AM on 10th September for the special #DhruvPosterReel! 🔥#Mahaan#ChiyaanVikram #DhruvVikram @karthiksubbaraj @Music_Santhosh @7screenstudio pic.twitter.com/55HuEVlEuB
— Sony Music South (@SonyMusicSouth) September 8, 2021
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் வித்தியாசமான கெட்டப்பில் விக்ரம் இருக்கும் வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில் மஹான் படத்தில் நடிக்கும் துருவ் விக்ரமின் போஸ்டர் செப்டம்பர் 10-ஆம் தேதி (நாளை) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது .