விக்ரமின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் விக்ரம். இவர் தனது திரைப்படத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வார். இந்த நிலையில் இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. மேலும் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் இருக்கும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
இவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டது. இதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விக்ரம் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றார்கள். மேலும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என ரசிகர்கள் நம்பிக்கை உடன் இருக்கின்றனர். மேலும் விக்ரம் எப்படி இருக்கின்றார் என்பது பற்றி அவரின் மகன் அப்டேட் கொடுக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை. காய்ச்சல் காரணமாகவே அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்த நிலையில் திடீரென நெஞ்சு பகுதியில் அசவுகரியமாக இருப்பதாக கூறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனவும் தற்பொழுது நலமாக இருக்கின்றார் எனவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் காவேரி மருத்துவமனை விக்ரமுக்கு மாரடைப்பு இல்லை. நெஞ்சு பகுதியில் அசவுகரியம் மட்டுமே என அறிக்கை வெளியிட்டிருக்கின்றது.