Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் படத்தின் டிரைலர் வெளியீடு…. ரசிகர்களின் அமோக வரவேற்பு….!!!!!!!!

கமல்ஹாசன் நடிப்பில் தயாரான விக்ரம் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும் கமலுடன் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் ஃபாசில் போன்றோரும் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமா வட்டாரங்களை சார்ந்தவர்களும் இந்த படத்தை ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது தமிழ் சினிமாவிற்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப்படம் தேவை என்ற காரணத்தினால் அந்த வெற்றியை கமலின் விக்ரம் திரைப்படம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அனிருத் இசையில் பத்தல பத்தல என்ற பாடலை கமல் எழுதி பாடி இருக்கின்றார். ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இந்த பாடலை தொடர்ந்து தற்போது விக்ரம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கின்றது.

செம மாஸ்ஸாக  வெளியான ட்ரெய்லர் தற்போது மிகவும் டிரெண்ட் ஆகி வருகிறது. கமல், பகத் ஃபாசில், விஜய் சேதுபதி போன்ற மூவரும் அசத்தும் இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கின்றது. ஆக்சன் திரில்லர் கதைக்களத்தில் உருவாக்கியுள்ள இந்த திரைப்படத்தின் மூலமாக விக்ரம் படம் கண்டிப்பாக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்பது பொதுவான கருத்தாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |