இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. ஆனால், அதற்கு பிறகு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மக்கள் நீதி மய்யம் கட்சி தயாரானதால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு தாமதமானது.
இருந்தாலும் கமல்ஹாசனின் ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் விதமாக, அவரின் பிறந்தநாளன்று ’விக்ரம்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், ’விக்ரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய் சேதுபதி, கமல்ஹாசன், ஃபகத் பாசில் மூவரும் மிரட்டலாக காட்சியளிக்கின்றனர்.