விக்ரம் திரைப்படத்தின் புரமோஷனுக்காக பஞ்சதந்திரம் நண்பர்கள் ஒன்றிணைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ். கைதி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கமலின் தீவிர ரசிகர். இத்திரைப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கின்றார்.
Glad to see my most favourite #Panchatanthiram gang back in action ❤️..
It's not Ram it's #Vikram 🔥https://t.co/Y9ZLIv9BGa— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) May 27, 2022
இந்த நிலையில் விக்ரம் திரைப் படத்தின் புரமோஷனுக்காக பஞ்சதந்திரம் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் இணைந்துள்ள வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகின்றது. சென்ற 2002ஆம் வருடம் கமல், சிம்ரன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன், யூகி சேது உள்ளிட்டோர் நடிப்பில் காமெடி கதைகளத்தில் வெளியான பஞ்சதந்திரம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக படத்தில் இடம்பெற்ற நண்பர்கள் போன் பேசும் காட்சிகள் மிகவும் பிரபலமானது. இந்த நிலையில் விக்ரம் படத்தின் புரமோஷனுக்காக புதிய ப்ரோமோ ஒன்றை படக்குழு உருவாக்கி இருக்கின்றது. அதில் பஞ்சதந்திரம் படத்தில் இடம்பெற்ற போன் பேசும் பாணியில் அமைந்துள்ளது. இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.